• February 7, 2025

மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

 மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீநிதி – கவுசிக் தேவ் ஆகியோருக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
பின்னர் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கிடைத்தற்க்கு நன்றி. கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தைக் தலைமையேற்றி நடத்தி வைத்திருப்பார். இந்த மாவட்டத்தை கம்பீரமாக மாற்றிய பெருமை பொங்கலூர் பழனிச்சாமிக்கு உண்டு. சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி, தி.மு.க.வில் வந்து இணைய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அப்போதிலிருந்து இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். சட்டமன்றத்தில் மதியழகன் தொகுதிக்கு. தேவையானவற்றை கேட்டு பெறுகின்ற முறையை பார்த்தால் சிறப்பாக இருக்கும்.
இது ஒரு சீர்த்திருத்தம் மற்றும் தமிழ் திருமணமாக இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது. 1967ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் சீர்த்திருத்த திருமணம் சட்டப்படி செல்லும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது. இ.பி.எஸ். தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம். 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், எஞ்சிய 30% வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.
மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி. நிதிப்பிரச்சினையை சீரமைத்த பின் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *