திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் தேர்வு
![திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் தேர்வு](https://tn96news.com/wp-content/uploads/2022/09/12.jpg)
அறங்காவலர் குழுவினருடன் அமைச்சர் சேகர்பாபு .
முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருசெந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் திகழ்கிறது. உலக புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது..
மாப்பிள்ளையூரணி, இந்திரா நகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவை சேர்ந்த இரா.அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த பா.கணேசன் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர்,
அதனைத் தொடர்ந்து இன்று அறங்காவலர் குழு தலைவர் தேர்வு, திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ம.அன்புமணி முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக செந்தில் முருகன், அனிதா குமரன், ராமதாஸ், அருள்முருகன், கணேசன் ஆகிய 5 பேர் பதவியேற்று கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் தூத்துக்குடி உதவி ஆணையர் தி.சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவராக ரா.அருள்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தலைவர் பதவியேற்றுக் கொண்டார். கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அறநிலையத் துறையினர், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)