அகவிலை நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும்; ரெயில்வே ஓய்வு ஊதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
அகில இந்திய ரெயில்வே ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை கூட்டம் நடைபெற்றது, கிளை தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தங்கவேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.
மகளிர் அணி தலைவர் பட்டம்மாள் தீர்மானங்கள் பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். எழுத்தளார் உதயசங்கர், சங்க உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கருத்துரை வழங்கினார். விவாதத்திற்கு பிறகு த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் நாராயணனன் நன்றி கூறினார
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*மத்திய அரசின் மருத்துவமனை வசதிகள் அனைத்து நகரங்களிலும் இல்லாத காரணத்தினால் நிலையான மருத்துவப்படி ரூ 1,௦௦௦ என்பதை ரூ. 3,௦௦௦ ஆக உயரத்தி கொடுக்க வேண்டும்,
*மத்திய அரசின் மருத்துவ திட்டத்தில் பதிவு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள், அவ்வாறு பெறக்கூடிய சிகிச்சையின் மருத்துவ செலவை அரசு ஈடு செய்யவேண்டும்.
*ஓய்வூதியதாரர்கள் ,முறையே 65,70 மற்றும் 75 வயதை நிறைவு செய்யுபோது அவர்களின் ஓய்வூதியம் முறையே 5%, 1௦%,15% வீதம் உயர்த்தி கொடுக்க வேண்டும்,
*பென்சன் விதிகளை முறைப்படுத்தி வருமான வரிசெலுத்துவதில் இருந்து ஓய்வூதியதார்களுக்கு முழுவிலக்கு அளிக்க வலியுறுத்துகிறோம்,
*மெடிக்கல் அலவன்ஸ் பெறுபவர்களுக்கு கேட்ராக்ட் ரெட்டினாபதி, சிறுநீரக கல் போன்ற நோய்களுக்கு 3 மாதம் ஆன நோய்கள் என்பதால் மருத்துவமனையில் அடமிட் செய்து மருத்துவம் செய்திட வேண்டும்,
*ஓய்வூதியதாரர்களின் கம்யூடேசன் தொகையை 12 ஆண்டுகளில் திருப்பி கொடுக்கப்படவேண்டும்.
*1.1.2020(17%)முதல் 30.6.2021(28%) வரை கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலை நிவாரண தொகையை (11%)உடனே வழங்கும்படி மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.