சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து டி.ராஜேந்தர், நாளை சென்னை திரும்புகிறார்

 சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து டி.ராஜேந்தர், நாளை  சென்னை திரும்புகிறார்

நடிகரும் இலட்சிய தி.மு.க. தலைவருமான டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 ந்தேதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.
வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி.ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பூரண நலம் பெற்றதை தொடர்ந்து டி.ராஜேந்தர் சென்னை புறப்பட்டார். குடும்பத்தினருடன் ஜூலை 22 (நாளை) அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
டி.ராஜேந்தருடன் அவரது இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் நாடு திரும்புகின்றனர்.
சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து டி.ராஜேந்தர் நன்றி கூறுகிறார்.
டி.ராஜேந்தர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *