• April 20, 2025

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2017- ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 15 சதவீதம் உயர்வுடன் ஓய்வூதியம் அமல்படுத்த கோரியும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரியும், நிலுவையில் உள்ள மருத்துவப் படியை வழங்கவும், 2019-ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, துணை தலைவர் கோலப்பன், கிளை செயலாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் மோகன்தாஸ், துணை செயலாளர் பரமசிவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *