• February 7, 2025

கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் கன மழை

 கோவில்பட்டியில்  இடி, மின்னலுடன்  கன மழை

கோவில்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. கடந்த கோடை காலங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.
பகல் நேரங்களில் வெளியே வருபவர்கள் அதிகம் பேர் இளநீர்,மோர், பழரசம், சர்பத், குளிர்பானங்கள் அருந்தி வெப்பத்தை தணித்தனர், இதனால் இது போன்ற கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இறிப்பினும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் காரணமாக பொது மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் கொளுத்திய வெயில் மதியம் சற்று தணிந்து காணபட்டது, 3 மணிக்கு மேல் இருள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. 4 அணி அளவில் லேசாக தூறலாக தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கியது. அத்துடன் பலத்த இடி சத்தம் கேட்டபடி இருந்தது, அவ்வப்போது மின்னல் காணப்பட்டது. சுமார் 40 நிமிடம் வரை மழை நீடித்தது.
கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வழக்கமாக புதுரோடு இறக்கத்தில் மெயின்ரோடு சந்திப்பில் மழை நீர் தேங்கும். இன்றைய மழையின் போதும் அந்த இடத்தில் மழை நீர் தேங்கியது. இந்த சாலையில் மழை நீர் தேங்குவதை தடுக்க வடிகால் அமைக்கும் பணி தொடங்கி ஒரு மாதம் ஆகப்போகிறது, இன்னும் முடியவில்லை. இதனால் மழை நீர் வழக்கம் போல் சாலைகள் சந்திப்பில் தேங்கியது.
மேலும் சாலையின் ஒரு பக்கத்தில் உள்ள சாக்கடையை தோண்டி அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இதனால் சாலையில் சாக்கடை ஓட தொடங்கியது. நடந்து செல்வோரும் ,இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய மழையின் போது சாக்கடையும் கலந்து ஓடியதால் சுகாதார கேடு நிலவியது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *