“யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன், எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும்” – இளையராஜா

 “யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன், எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும்” – இளையராஜா

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா.

இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை.

தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். 35 நாட்களில் சிம்பொனியை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இவர் தற்பொழுது வாலியண்ட் சிம்பனி என்னும் இசையை உருவாக்கியுள்ளார். இந்தியாவில் இவரே முதல் முறையாக சிம்பனியை உருவாக்கியுள்ளார். இது குறித்த நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜா பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது “

நான் இசையமைத்த பல பாடல்களில் நான் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையை அறிமுகப்படுத்தி உங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். இசையமைப்பாளர் பாக், மொசார்ட், பீத்தோவன் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும். அவர்களை பற்றி யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். நான் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

இசைத்துறையில் பல விஷயங்களை நான் உருவாக்கியுள்ளேன், அறிமுகப்படுத்தி உள்ளேன். ஒரு இசை ரசிகனுக்கு பல மாதிரியான உலக இசையை என் பாடலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

நான் சிம்பனியை உருவாக்கி இருக்கிறேன் என்றால் எனக்குள் எப்பேற்பட்ட இசை ஆர்வம் இருக்கிறது என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பலருக்கு வயிற்றெரிச்சல் தான் ஏற்படுகிறது. எல்லாருடைய வாழ்க்கையிலும் என் இசை இருக்கிறது. நீங்கள் கேட்ட உடனே நான் இசையை கொடுக்கனுமா? அப்படி கொடுத்தால் நான் சரவண பவன் ஆகிவிடுவேன்.

என் இசையை கேட்டு குழந்தை உயிர் பிழைத்துள்ளது, ஒரு யானை கூட்டம் என் பாடலை கேட்க வந்துள்ளது. இதைச் சொன்னால் அவருக்கு தலைகனம் மற்றும் கர்வம் அவருக்கு அதிகம் என கூறுவார்கள். எனக்கு வராமல் வேறு யாருக்கு வரும்? எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும்.

உலகத்திலேயே யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன். அப்போ எனக்கு தானே திமிரு வர வேண்டும். வேலை தெரிந்தவனிடம் மட்டுமே கர்வம் இருக்கும்,”

இவ்வாறு  இளையராஜா கூறியுள்ளர்.

இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *