தென்காசி கோவில் நுழைவு வாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
தென்காசி நகரில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது . இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஒரு நபர் தனது கையில் வைத்திருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை திறந்து கோவில் நுழைவு வாயில் பகுதியில் ஊற்றி தீ வைத்தார்.
இதைப்பார்த்த கோவில் பணியாளர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த பகுதியில் கூடியிருந்த மக்களிடம் விசாரணை மேற்கொண்டார் அப்போது அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கோவில் நுழைவாயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை தென்காசி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அந்த நபரிடம் நடத்திய் விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த பாலன் (வயது 31)
என்பது தெரிய வந்தது.
மேலும் வைத்த ஆனந்த பாலன், “நான்தான் சிவன்.. நான்தான் கோவிலில் உள்ளேன்… என்ற ரீிதியில் பேசியதாகவும் எனவே அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர் .மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.