கோவில்பட்டி ஜி. வி. என் . கல்லூரியில் துறைகளுக்கு இடையேயான மாணவர் திறன் போட்டிகள்

 கோவில்பட்டி ஜி. வி. என் . கல்லூரியில் துறைகளுக்கு இடையேயான மாணவர் திறன் போட்டிகள்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு (ஜி. வி. என். )தன்னாட்சி கல்லூரியின் ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றமும்; நுண்கலை மன்றமும் இணைந்து, துறைகளுக்கிடையேயான திறன்சார்ந்த போட்டிகள் “டேலண்ட்ஃபெஸ்ட் -2024” 2 நாட்கள் நடத்தின.
இவ்விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார்.
.
இரண்டு நாட்கள் நடந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் வினாடி வினா, நடனம், மைம், ஸ்கிட், பாடல், மற்றும் படைப்பு எழுதுதல்; ஆகியவை நடைபெற்றன. 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை Statistics துறை பெற்றது, இரண்டாவது இடத்தை BCA துறை பெற்றது.
கல்லூரி செயலாளர், முதல்வர், சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாணவப் பிரதிநிதிகள் ஆர்த்தி, பொன்ராஜ் மற்றும் இதர மாணவ மாணவியர்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா. சரவண செல்வகுமார் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *