நாலாட்டின்புதூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை; மற்ற இடங்களில் 21-ந்தேதி மின்சப்ளை நிறுத்தம்
கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எஸ்.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21/12/24 -ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
மின்சப்ளை நிறுத்தப்படும் உபமின் நிலையங்கள் மற்றும் அதற்கு உற்பட்ட பகுதிகள் விவரம் வருமாறு:-
கழுகுமலை உபமின் நிலையம்:- கழுகுமலை, வேலாயுதபுரம், கரடிகுளம், குமராபுரம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பநேரி, குருவிகுளம்,
கோவில்பட்டி உபமின் நிலையம்: கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் பகுதி, முகமதுசாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி,
எப்போதும்வென்றான் உபமின்நிலையம்:- எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமுங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி.
விஜயாபுரி உபமின்நிலையம்:- திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, குருமலை, வேப்பன்குளம், மும்மலைப்பட்டி.
சிட்கோ உபமின்நிலையம்:- முத்துநகர், சிட்கோ, கணேஷ்நகர், தங்கப்பன்நகர், ஜோதிநகர், புதுரோடு,
செட்டிகுறிச்சி உபமின்நிலையம்:- செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்திஸ்வரபுரம்,
சன்னதுபுதுக்குடி உபமின்நிலையம்:- கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பணாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர் 1, 2 ஆகிய பகுதிகள்.
குறிப்பு: நாளை 19/12/24 வியாழக்கிழமை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை நாலாட்டின் புதூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட நாலாட்டின்புதுர், கே.ஆர்..நகர் , கே,ஆர்..கல்லூரிகள், ரெயில்வே காலனி, முடுக்குமீட்டான்பட்டி, வானரமுட்டி , காளாம்பட்டி, காலாங்கரைபட்டி, இடைசெவல் , வில்லிசேரி ஆகிய பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.