தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 5 நாட்களுக்கு பின்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
![தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 5 நாட்களுக்கு பின்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/download-2-1.jpeg)
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு அறிவிப்புவரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக தூத்துக்குடியில் 272 விசைப்படகுகளும், தருவைகுளம் 200, வேம்பார் 50 விசைபடகுகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் தற்போது வானிலை சீரடைந்து உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலையில் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 98 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)