• November 15, 2024

ஆடியன்ஸ் தலைவலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது – ‘கங்குவா’ ஒலிகலவை குறித்து ரசூல் பூக்குட்டி ஆதங்கம்

 ஆடியன்ஸ் தலைவலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது – ‘கங்குவா’ ஒலிகலவை குறித்து ரசூல் பூக்குட்டி ஆதங்கம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ‘கங்குவா’ படம் நேற்று வெளியானது. இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக படம் முழுக்கவே யாரேனும் ஒருவர் கத்தி கொண்டே இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள். இதையே பலரும் தெரிவித்து வருவதால், நெட்டிசன்கள் படகுழுவினரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ரசூல் பூக்குட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், ரசூல் பூக்குட்டி கூறியிருப்பதாவது:-

இது போன்ற பிரபலமான படங்களின் ஒலி குறித்த விமர்சனத்தை பார்க்க வருத்தம் அளிக்கிறது. எங்களுடைய கலையும், கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கி கொண்டுள்ளன. யாரை குற்றம் சொல்வது., சவுண்ட் இன்ஜினியரையா அல்லது அனைத்து பாதுகாப்பின்மையையும் திருப்திப்படுத்தும் நோக்கில் கடைசி நேரத்தில் வரும் எண்ணற்ற திருத்தங்களையா.., ஆடியன்ஸ் தலைவலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி ஒலிக்கலவை வடிவமைப்பாளர் இவ்வாறு கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *