• November 15, 2024

கோவில்பட்டியில் அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டியில் அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜி புதன்கிழமை அன்று காலை பணியில் இருந்தார். அப்போது பெருங்களத்தூரை , விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்து டாக்டர் பாலாஜியை சரமாரியாக  கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

.’டாக்டர் பாலாஜி, புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட  தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்ற தவறான புரிதலில் இந்த கத்திக்குத்தில் விக்னேஷ்  ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த் சம்பவத்தை கண்டித்தும், பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அரசு டாக்டர்கள் சந்தித்தினர் அறிவித்தனர்.,

‘இதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிமனியன், அவர்களுடன்  பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை வாபஸ் பெற செய்தார். .அதே சமயம் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கும் கொண்டு  செல்லும்  வகையில் அணைத்து அரசு மருத்துவமனைகளிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடம் நடைபெறும் என்று டாக்டர்கள் சங்கத்தினர்  அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி தலைமைஅரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை டாக்டர்கள் கவன ஈர்ப்பு ஆப்பாட்டம் நடத்தினார்கள்..

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள்   மோசஸ், துரை பத்மநாபன், இந்திய மருத்துவர் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் மதனகோபால்,சிவநாராயணன், பத்,மாவதி, பூவேஸ்வரி, கமலா மாரியம்மாள், கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள் மட்டுமின்றி மருத்துவமனை ஊழியர்களும் பங்கேற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *