கோவில்பட்டியில் தொடரும், `பஸ்களில் பிரேக் பிடிக்கா சம்பவங்கள்’; தீர்வுக்கு என்ன செய்யலாம்?
கோவில்பட்டியில் தொடர்ந்து சில நாட்களாக பஸ்களில் பிரேக் பிடிக்கா சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நல்ல வேலையாக பெரிய அளவில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வந்த அரசு பஸ் ,புதுரோடு இறக்கத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்ட போது பிரேக் பிடிக்கவில்லை. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு முச்சந்தியில் உள்ள கோவில் நடைபாதையில் மோதி பஸ்சை நிறுத்தினார்.
இதே போல் மெயின்ரோட்டில் ஸ்டேட் வங்கி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ்சில் இதே போல் பிரேக் கோளாறு ஏற்பட்டதால் டிரைவரின் சாமர்த்தியத்தால் ஸ்கூட்டர்கள் மீது மோதி நின்றது. இதில் சிலர் ஸ்கூட்டர்கள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில் இன்று இதே போல் தனியார் மினி பஸ்சில் பிரேக் கோளாறு ஏற்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடலையூர் நோக்கி சென்ற பஸ் கூசாலி பட்டியை தாண்டிய போது பிரேக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சிறிது தூரத்தில் வலது புறத்தில் மேடும் பள்ளமுமாக காலி இடம் இருந்ததை கண்டார். உடனே பஸ்சை அந்த பகுதியை நோக்கி திருப்பி ஓட்டினார். மேடு பள்ளத்தில் சிறிது தூரம் ஓடி அந்த பஸ் நின்றுவிட்டது.
பஸ்சில் இருந்த பயணிகள் முதலில் பயத்தில் அலறினாலும், பின்னர் பாதுகாப்பாக பஸ் நின்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பஸ்களில் பயன்படுத்தப்படும் ஏர் பிரேக் என்பது வாகனங்களுக்கான உராய்வு பிரேக் ஆகும், இதில் பிஸ்டனில் அழுத்த்தப்பட்ட காற்று, வாகனத்தை நகர்த்துவதற்காக பார்க்கிங் மற்றும் எமர்ஜென்சி பிரேக்குகளை வெளியிட பயன்படுத்தப்படுகிறது.
வாகனத்தை மெதுவாகவும் நிறுத்தவும் பிரேக் பேடுகள் பிரேக் ஷோக்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் .கனரக வாகனங்களில் ஏர் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன,
ஏர் பிரேக்குகளை சீராக இயக்கக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் அவை சீராக இயங்குவது கடினம்.
மேலும், ஏர் பிரேக்குகள் ஹைட்ராலிக் பிரேக் அமைப்புகளிலிருந்து வித்தியாசமாக இயக்கப்பட வேண்டும் என்பதால், ஏர் பிரேக்குகளுடன் வாகனத்தை ஓட்டுவதற்கு சரியான பராமரிப்பு பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.
வாகனம் ஓட்டுவதற்கு முன், காற்றழுத்த அமைப்பைப் பரிசோதித்து, அனைத்து டாங்கிகளும் வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பதை டிரைவர் உறுதிப்படுத்த வேண்டும்., ஒரு ஓட்டுனர் தங்கள் வாகனத்தின் பிரேக் இணைப்புகளில் “ஸ்லாக்கை” சரிசெய்ய வேண்டியிருக்கலாம். எனவே அது பற்றி ஒவ்வொரு டிரைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்/
கோவில்பட்டியில் உள்ள டிரைவர்கள் அனைவருக்கும் ஏர் பிரேக் பற்றிய முழு விவரம் தெரிந்து வைத்து இருக்கிறார்களா என்பது பற்றி போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி பயிற்சி முகாம் நடத்தினால் பிரேக் கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம். மக்களும் பயமின்றி சாலைகளில் பயணம் செய்யலாம்…!