தமிழர்களின் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றார். தொடர்ந்து இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்று கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை அவர் நேற்று சந்தித்தார்.
அப்போது அனுரா குமார திசநாயகே கூறியதாவது:-
அதிக தமிழர்கள் வாழும் வடக்கு பகுதிக்கு சொந்தமான நீர்வளங்களை தமிழ்நாடு மீனவர்கள் அழிக்கின்றனர். எங்கள் அரசாங்கம், நீர்வளங்களை தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும். அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம்.
போரினால் பாதிக்கப்பட்ட ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அனுரா குமார திசநாயகே கூறினார்.