• November 14, 2024

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று (நவம்ப்ர்.11) நீதிபதி சஞ்சீவ் கன்னா 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரது பதவிக்காலம் மே 13, 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும். இந்த நிகழ்வில், குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1960-ம் ஆண்டு மே 14-ம் தேதி டெல்லியில் சஞ்சீவ் கன்னா பிறந்தார். டெல்லி பல்கலையில் சட்டம் பயின்றார். 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கன்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *