குளியல் அறையில் வழுக்கி விழுந்தார் ; பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மரணம்
பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் .மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அவர் எதிபாரதவிதமாக குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66
இந்திரா சவுந்தர்ராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். டி.வி.எஸ் நிறுவனத்தில் துணை பொறியாளாராக பணியாற்றிவர். தனது தாயின் பெயரான இந்திராவை , பெயருக்கு முன்னால் சேர்த்து இந்திரா சவுந்தர்ராஜனாக கதைகளை படைத்து வந்தார்.
தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன். இவரது தனி பாணியான கதையாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
700 சிறுகதைகள் , 340 நாவல்கள் 105 தொடர்கள் எழுதியுள்ளார். மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை எழுதி வந்தார். ஆன்மிக சொற்பொழிவு மூலமும் புகழ்பெற்றவர்.
இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய ‘என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம்’ உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
சிருங்காரம் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். மேலும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
எழுத்தாளர் சவுந்தராஜன் மறைவு பெரிய இழப்பு என்று பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
.