ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம்

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம்

கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது.நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது.

எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது.

இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று நமது புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம்  செய்தால்  எப்பேற்பட்ட கர்ம வினைகளும் நீங்கி  ராஜபோக வாழ்வு கிட்டும் என்பது அகத்தியர் வாக்கு.

அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள். அன்னாபிஷேகத்தின் போது, வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

ஐப்பசி பௌர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது காலம், காலமாக நடந்து வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அன்னாபிஷேக விழா இந்த ஆண்டு நவம்பர் 15, 2024 வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் மிக சிறப்பாக  பெற உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *