திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்கள்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
![திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்கள்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு](https://tn96news.com/wp-content/uploads/2024/11/images-5-e1730810015951.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.,ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்! என்ற தலைப்பில் கூறி இருப்பதாவது:-
சிறிய வயதுள்ள ஒரு சிறுவனை சாதியை வைத்து தாக்கும் அவலத்தை ஆட்சியாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்? வேங்கைவயல் நாற்றம் இன்னும் வீசி கொண்டிருக்க,நெல்லையில் சிறுவன் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல் என இன்னும் எத்தனை அவலங்கள் காத்திருக்கிறது?
கூட்டணி கட்சியினரை கட்டுபடுத்தியும்,குரலெழுப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்தும் முழு கட்டப்பஞ்சாயத்துக்காரராக மாறியுள்ள மக்கள் விரோத அரசின் முதலமைச்சர் அவர்களே! தேர்தல் நேரத்தில் தான் பட்டியலின மக்களின் நியாபகம் வருமா?
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)