நடிகர் விஜய்யின் புதியபடம்: வெளிநாட்டு உரிமை தொகையில் சாதனை
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக கேரள மாநிலம் பைய்யனூரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகளை எடுத்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் குத்து பாடலாக உருவாகியுள்ளதாம். தற்போது, படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விஜய்-69 படத்தின் வெளிநாட்டு வெளியீட்டிற்கான உரிமையை துபாயை சேர்ந்த பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இதுவே, தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட திரைப்படம் என கூறுகின்றனர். இன்னும் இப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் இப்படம் 75 கோடி வரை வசூலித்திருக்கின்றது.
இதையடுத்து டிஜிட்டல் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ் போன்ற பல விஷயங்கள் உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இப்படம் ரிலீசுக்கு முன்பே லாபகரமான படமாக இருக்கும் என்றே தெரிகின்றது.