கோவில்பட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தி நகரும் படிக்கட்டுகள் அமைக்ககோரி மதிமுக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி ஒன்றிய மதிமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை இனாம்மணியாச்சி பைபாஸ், கும்கோணம் டிகிரி காபி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்: விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார்., நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் .ராஜ்குமார் .ராஜசேகர் காளிராஜ் காளிசாமி, மணிராஜ்.சிவபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
• விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து அகற்றவும்.
• கோவில்பட்டி வழியாக மும்பை, டெல்லிக்கு தினசரி ரெயில் இயக்கவும்.
• கிடப்பில் கிடக்கும் தூத்துக்குடி – விளாத்திகுளம் – மதுரை ரெயில் பாதை வேலைகளை உடனே தொடங்கிடவும்.
• மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கிட வேண்டும்,.
*கோவில்பட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தி நகரும் படிக்கட்டுகள் அமைத்திடவும்,
கூடுதல் நடைமேடைகள் அமைத்திட வேண்டும்..
*சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போவதை கைவிட வேண்டும்,.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மாரிச்சாமி, சரவணன், கேசவநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,