சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாத வாள் இல்லாத புதிய நீதி தேவதை சிலை

 சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாத வாள் இல்லாத புதிய நீதி தேவதை சிலை

தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டு நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதையின் சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும். இது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து நீதி வழங்கிட கூடாது, சரியான எடை போட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும்.,அநீதியை வீழ்த்திட வாளும் நீதிதேவதையின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது என்பதை குறிக்கும் வகையில் கண்கள் கட்டப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான நூலகத்தில் கண்கள் கட்டப்படாத, வாள் இல்லாத புதிய நீதி தேவதை சிலை திறக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவுறுத்தலின்படி இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது.

புதிய நீதி தேவதையின் சிலையில், வாளுக்கு பதிலாக அரசியலைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது. அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் நீதி தேவதையின் வலது கையில் இடம்பெற்றிருந்த வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது.

நம்சமூகத்தில் சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இரு தரப்பு உண்மைகளும், வாதங்களும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்களால் எடைபோடப்படுகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்தும் வகையில் வலது கையில் நீதியின் தராசு உள்ளது.

சட்டம் ஒருபோதும் குருடாகாது என்பதையும், அது அனைவரையும் சமமாக பார்க்கிறது என்பதையும் வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய சிலையானது, தலையில் கிரீடம், நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *