குலசேகரப்பட்டினத்தில் தசரா: 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு- ஆட்சியர்

 குலசேகரப்பட்டினத்தில் தசரா: 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு- ஆட்சியர்

குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

,தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரப்பட்டினத்தில் அமையப் பெற்ற முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குலசேகரப்பட்டினம் கடற்கரை அருகிலும் மருத்துவக் குழு மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழு அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தின் எல்லா இடங்களிலும் கொசு ஒழிப்பு புகைமருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் தினசரி அடிக்கப்படுகிறது.

மேல்நிலை தொட்டிகள் மூலமும் லாரிகள் மூலமும் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குளோரின் அளவை பரிசோதனை செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய சுகாதார ஆய்வாளர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேவைகள் கடற்கரை பகுதி, பஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *