• November 1, 2024

தூத்துக்குடி-கொல்கத்தா வந்தேபாரத் ஸ்லீப்பர் ரெயில்;மத்திய மந்திரியிடம் பாஜக கோரிக்கை மனு

 தூத்துக்குடி-கொல்கத்தா வந்தேபாரத் ஸ்லீப்பர் ரெயில்;மத்திய மந்திரியிடம் பாஜக கோரிக்கை மனு

தூத்துக்குடியில் இருந்து கொல்கத்தா வரை வந்தேபாரத் ஸ்லீப்பர் ரெயிலை இயக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி  எல். முருகனிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி வந்த மத்திய இணை மந்திரி  எல். முருகனிடம். பாரதிய ஜனதாகட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில்,கூறி இருப்பதாவது:-

“தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டமானது வணிகம் மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்கி வரும் வேலையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் தொழில் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். 

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன்சுற்று வட்டாரத்தை சார்ந்த பொதுத்துறை வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் போன்ற பல்வேறு தரப்பு மக்கள் தொழில் மற்றும் வணிகம் காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு காரணத்திற்காக நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிக்கும் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் கன்னியாகுமரியில் இருந்து வாரம் ஒருமுறை மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (126664) ரெயிலை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதுள்ளது. 

எனவே தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக தூத்துக்குடியில் இருந்து திருச்சி, சென்னை, நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டனம், புவனேஸ்வர், பாலேஷ்வர், கொல்கத்தாவின் ஹவுரா அல்லது சாலிமர் வரை செல்லும் வகையில் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூரபப்ட்டு இருந்தது.

மத்திய மந்திர்யுடன் சந்திப்பின் பொது பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேச சென்ன கேசவன்,  மாவட்டபொதுச்செயலாலர் ராஜா, ஓபிசி அணி மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட செயலாலர் வீரமணி, இளைஞரணி மாவட்ட துனை தலைவர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *