சிலுவைப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 56 குடியிருப்புகள்; அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

 சிலுவைப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 56 குடியிருப்புகள்; அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைபட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக 56 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த் குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது. மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி எஸ் எம்.நாசர்

குடியிருப்புகளை திறந்து வைத்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா முன்னிலை வகித்தார்.

முகாம் வாழ் தமிழர் நலன் காக்கும் சிறப்பு மனநல மருத்துவ சேவைகள் முகாமையும்தொடக்கி வைக்கப்பட்டது… விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத்  கூடுதல் ஆட்சியர் .ஐஸ்வர்யா,மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

புதிய குடியிருப்புகள் திறப்பு விழாவை தொடர்ந்து  புதிய வீடுகளில் பயனாளிகள் குடியேற தொடங்கினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *