கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி-விஜயதசமி விழா நாளை  தொடக்கம்

 கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி-விஜயதசமி விழா நாளை  தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன்  கோவிலில் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா நாளை   3-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
3-10-2024 வியாழக்கிழமை

அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மதுகைடவர் அழிவிற்கு காரணமான தேவிகுமாரி வடிவத்தில் தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்: துர்க்கை அம்மன் கோலம்
4-10-2024 வெள்ளிக்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மகிஷாசுரனை வதைக்க புறப்பட்ட ராஜராஜேஸ்வரி தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்:துர்க்கை அம்மன் கோலம்
5-10-2024 சனிக்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: மகிஷாசுரனை வதைத்து சூலத்துடன் மகிஷன் தலைமீது நிற்கும் தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்: துர்க்கை அம்மன் கோலம்
6-10-2024 ஞாயிற்றுக்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: அம்பிகையின் வெற்றித்தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்: இலக்குமி அம்மன் கோலம்
7-10-2024 திங்கட்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: அம்பிகையிடம் தூதன் வந்து பேசும் காட்சி
அம்மனின் அருட்கோலங்கள்: அருள்மிகு இலக்குமி அம்மன் கோலம்
8-10-2024 செவ்வாய்க்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: சர்ப்பாசனத்தில் சண்டிகாதேவி அமர்ந்த தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்: இலக்குமிஅம்மன் கோலம்
9-10-2024 புதன்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: பொன்பீடத்தில் அம்பிகை அமர்ந்து வீணை வாசிக்கும் தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்:  சரஸ்வதி அம்மன் கோலம்
10-10-2024 வியாழக்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: அம்பிகையின் கருணை நிறைந்த அருட்தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்:  சரஸ்வதி அம்மன் கோலம்
11-10-2024 வெள்ளிக்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்: அம்பிகையின் வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியன தரித்த தோற்றம்
அம்மனின் அருட்கோலங்கள்: சரஸ்வதி அம்மன் கோலம்
12-10-2024 சனிக்கிழமை
அம்மன் கொலு அலங்காரத் தோற்றம்:அம்பிகை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்து வணங்கும் சிவசக்தி வடிவில் திருவீதி உலா வருதல்

அம்மனின் அருட்கோலங்கள்: பராசக்தி கோலம்.
இரவு 7 மணியளவில் அம்மன் திருவீதி உலா வருதல் கட்டளைதாரர் : கே.பாஸ்கர் – மங்களசுந்தரி குடும்பத்தார்
ஒவ்வொரு நாளும் நவராத்திரி பூஜை சரியாக 7.29 மணிக்கு ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணத்துடன் ஆரம்பமாகும். பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற வேண்டுகிறோம் என்று கோவில் கமிட்டியினர் தெரிவித்து உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *