தூத்துக்குடி டோல்கேட்டில் பேருந்து, டிரக், கனரக வாகனங்களுக்கு கட்டணம் சிறிது குறைப்பு
![தூத்துக்குடி டோல்கேட்டில் பேருந்து, டிரக், கனரக வாகனங்களுக்கு கட்டணம் சிறிது குறைப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/09/tollgatei34i-1.jpg)
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் தூத்துக்குடியில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து, டிரக், கனரக வாகனங்களுக்கு கட்டணம் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. கார், ஜீப், மினி பஸ் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் குறைக்கப்படவில்லை.
இந்த கட்டண குறைப்பு கண்துடைப்பு என்றும், டோல்கேட்டில் இருந்து 10கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்களுக்கு மாத சந்தாவாக ரூ.150, மற்றும் 10 கிலோ மீட்டரை தாண்டி உள்ளவர்களுக்கு ரூ.300 சந்தா என்ற விதிகள் உள்ளது. இது குறித்து தூத்துக்குடியில் உள்ள டோல்கேட்டில் கேட்டால் அங்குள்ளவர்கள் சரியான பதில் சொல்வதில்லை என்று வாகன ஓட்டிகள் விமர்சித்துள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)