• November 1, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலியாக அரசு அதிரடி: சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டு அருண் நியமனம்  

 ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலியாக அரசு அதிரடி: சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டு அருண் நியமனம்  

புதிய கமிஷனர் அருண்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் இரண்டு நாட்களுக்கு ம முன்பு படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொத்தூருக்கு அவரது உடலை சுமந்து சென்ற வாகனம் ஊர்ந்து சென்றது. வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள்  மோட்டடார் சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர்.

செல்லும் வழியில் மழை பெய்தது. மழையில் நனைந்தபடி தொண்டர்கள் சென்றனர். உடல் அடக்கம் ஏற்பாடு செய்யபட்டிருந்த இடத்திலும் மழை பெய்தது. இறுதி ஊர்வலம் அந்த இடத்தை அடைய இரவு 11 மணியை கடந்து விட்டது.

அதன்பிறகு இறுதி சடங்குகள் நடத்தபப்ட்டு நள்ளிரவில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்.படுகொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன்அரசின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன/. சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்ற குரல் அரசியல் கட்சியினரிடம் இருந்து எதிரொலிக்க தொடங்கியது.

 இதை தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி.யாக ராஜீவ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.

 சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும்  அருண், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண் வகித்து வரும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவிக்கு சென்னை தலைமையகம் கூடுதல் டிஜிபி ஆக இருக்கும் டேவிட்சன் தேவஆசீர்வாதம்  நியமிக்கபப்ட்டு இருக்கிறார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.

110-வது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக  பொறுப்பேற்க இருக்கும் அருண் 1998 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி.. சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.

ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி,  தூத்துக்குடி உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றினார்.

பின்னர், சென்னைக்கு வந்த அருண், துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார. மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012ல்  காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார்.

மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் – ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.

2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக அருண் பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த லாட்டரி அதிபர் உள்ளிட்ட கும்பலை  கைது செய்தது பாராட்டுகளை பெற்றது.

2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண். இந்நிலையில் , சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *