• April 30, 2024

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை

 தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது. பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பு துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பு  கடைப்பிடிப்பார்கள். 

நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கப்பட்டது.

சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நிலையில் தமிழகம், புதுவையில் நாளை 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *