• May 10, 2024

35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பள்ளி தோழர்கள்;  மறக்க முடியாத சம்பவங்களை பேசி மகிழ்ந்தார்கள்

 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பள்ளி தோழர்கள்;  மறக்க முடியாத சம்பவங்களை பேசி மகிழ்ந்தார்கள்

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் 1990ம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள், அப்பொழுது அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடந்தது.

 35 ஆண்டுகளுக்குப் பின்பு மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை சந்தித்து படிக்கும்போது நடைபெற்ற பல்வேறு விஷயங்களை, மறக்க முடியாத ஞாபகங்களை பகிர்ந்து கொண்டனர். . இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வி  தலைமை தாங்கினார். பள்ளியின் பணி நிறைவு பெற்ற தேசிய நல்லாசிரியை குமுதம் , பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் முத்தையா , ஆனந்தசெல்வி, பாத்திமாஜெயமேரி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவி செல்வக்கனி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியைகள் விஜய பொன்ராணி ,செல்வி, டோரதி செல்வின், முத்துச்செல்வி, அருள் காந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் படிக்கும் போது நடைபெற்ற  பல்வேறு சம்பவங்களை நிகழ்வுகளை நினைவு படுத்தினர். முடிவில் முன்னாள் மாணவி ஹெலன் பிருந்தா நன்றி கூறினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *