பதற்றம் நிறைந்த கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு
![பதற்றம் நிறைந்த கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/03/e573c0f1-0637-482f-a15a-f164ffc8f049-850x560.jpeg)
2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி முறப்பநாடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உள்ள மணக்கரை, ஆறாம் பண்ணை, முறப்பநாடு, கீழப்புத்தனேரி, சென்னல்பட்டி,அனவரதநல்லூர், வசவப்பபுரம் ஆகிய கிராமங்களில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சுந்தர், முறப்பநாடு காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் , குற்றப்பிரிவு, காவல் ஆய்வாளர், வனிதா ராணி ஆகியோர் தலைமையில் துணை ராணுவப் படையினர் (RPF)கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/03/a7cf1e76-dbea-4080-bb17-f1cc228d0acb-1024x457.jpeg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)