கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்தவர்களுக்கு பரிசுபொருட்கள்
![கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்தவர்களுக்கு பரிசுபொருட்கள்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/3accfa3d-8b4b-479b-84ae-d02328ee2b5a-e1697699968850-850x560.jpeg)
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பத்துறையின் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முகாமை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தொடங்கி வைத்தார்..கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரித்தவர்களுக்கு பரிசு பொருட்களையும் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்பிற்கான மேலாண்மை விருதுகளையும் அவர் வழங்கினார்.
இம்முகாமில் 68 சிகிச்சை 2115 குடற்புழு நீக்கம் 12 செயற்கை கருவூட்டல் 16 சினை பரிசோதனை 13 மலடு நீக்க சிகிச்சை தாது உப்பு கலவை வழங்குதல் மற்றும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் விஜயஸ்ரீ, உதவி மருத்துவர்கள் பசுவந்தனை .பிரதீப் ஒசநூத்து.திணேஷ் ,கால்நடை ஆய்வாளர் முருகன் பராமரிப்பு உதவியாளர்கள் ராமலட்சுமி.பார்வதி, இளவேலங்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்ரி முருகேசன், மலைப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் .இக்பால் என்ற சின்ன மாரியப்பன், ஊராட்சி செயலர் .ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)