ஓட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்; சண்முகையா எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராடடி ஒன்றியங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
*தூத்துக்குடி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டும் பணி*
*பேய்குளம் கிராமத்தில் 10ஆம் எண் மதகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பாலம் அமைக்கும் பணி*
*மேல தட்டப்பாறை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி*
*.மேல தட்டப்பாறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 8.25 மதிப்பீட்டிலான புதிய பேபர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை
*கலியாவூர் கிராமத்தில் கலியாவூர் முதல் காலாங்கரை வரை தார்ச்சாலை அமைக்கும் பணி
போன்றவற்றை*_ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்..
இதனையடுத்து காலாங்கரை கிராமத்தில் 6 கிலோவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியையும் இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்..
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தஆண்றோ, ஹெலன் பொன்மணி, செயற்பொறியாளர் .முத்துராஜ், உதவி மின் செயற்பொறியாளர் ஜெயக்குமார், கருங்குளம் யூனியன் சேர்மன் .கோமதி ராஜேந்திரன் மாவட்ட கவுன்சிலர் .பாலசரஸ்வதி நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
