கோவில்பட்டி போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்; பாலாஜி சரவணன் வழங்கினார்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பிடியாணை எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் காந்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் கனகசுந்தரம், பெண் தலைமை காவலர் சேதுலெட்சுமி, முதல் நிலை காவலர் செல்லதுரை மற்றும் காவலர் திருமேனி
கோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள சுமார் 60 பிடியாணைகளில் 60 எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் உலகநான் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய பெண் தலைமை காவலர் முத்துமாரி
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 2 ½ வருடம் சிறை தண்டனையும், விபத்து வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் பெற்றுத்தந்தும், கோவில்பட்டி கிழக்குகாவல் நிலையத்தில் உள்ள 55 சம்மன்களை சார்பு செய்து அதில் 44 சம்மன்களை விசாரணைக்கு வரவழைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் மாரீச்செல்வம் மற்றும் முதல் நிலை காவலர் அய்யாச்சாமி,
ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.