• November 14, 2024

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மோதல்

 சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மோதல்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீது சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மசோதா மீது ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியில் சார்பிலும் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மசோதாவிற்கு ஆதரவை தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஓ.பன்னிர்செல்வம் பேச அனுமதி அளித்தார். அப்போது பன்னீர்செல்வம் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அதிமுக சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சி சார்பில் ஒருவரை பேச அனுமதித்துவிட்டு, அதிமுக சார்பில் இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தது ஏன் என சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பினார்.

ஓபிஎஸ்-க்கு பேச வாய்ப்பளித்ததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். இதன் காரணமாக சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் ஒரு கட்டத்தில் வேட்டியை மடித்து கட்டி அ.தி.மு.க. வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓபிஎஸ் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என தெரிவித்தார். அது இன்னும் மாற்றப்படவில்லை என்று கூறினார்.தேர்தல் ஆணையத்திலும் அவர்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவு உள்ளது எனக் குறிப்பிட்டார்.’

மேலும் கடுமையாக விமர்சித்தார். ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.. அவர்களை கே.பி. முனுசாமி சமாதானப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கினேன் என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இது மரபை மீறிய செயல் அப்படி ஒரு விதி பேரவையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இதனால் சிறிது நேரம் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *