• November 15, 2024

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் மறு தேர்வு எழுத வாய்ப்பு; திண்டுக்கல் லியோனி தகவல்

 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் மறு தேர்வு எழுத வாய்ப்பு; திண்டுக்கல் லியோனி தகவல்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி செய்தியாளர்களிடம் பேசிய போது, ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் மறுதேர்வு நடைபெறும், அதில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களோடு சேர்த்து தேர்வு எழுதாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை 80 சதவீத மாணவ, மாணவிகள் எழுதியிருப்பதை வெற்றியாக கருதுவதாக குறிப்பிட்ட அவர், விடுபட்ட மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *