எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு: தூத்துக்குடி பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து தினேஷ் ரோடி நீக்கம் ; இரவில் சேர்ப்பு
தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சனம் செய்ததற்காக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வின் உருவப்படத்தை பா.ஜனதாவை சேர்ந்த சிலர் எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்,.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடி நேற்று கட்சி பதவியில் இருந்து 6 மாதத்துக்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்,.
இதற்கான அறிவிப்பை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு நேற்று மாலை வெளியானது.
அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அதாவது இரவில் இந்த அறிவிப்பை பா.ஜனதா மாநில பொதுசெயலாளர் பொன் வி,பாலகணபதி ரத்து செய்து அறிக்கை வெளியிட்டார்.
அவரது அறிக்கையில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் பா.ஜனதா தலைவர் பொறுப்பில் இருந்து தினேஷ் ரோடி 6 மாதம் விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தினேஷ் ரோடி தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செய்லப்டுவார் என்று கூறப்பட்டு இருந்தது.