• November 15, 2024

கடலில் மீனவர்களின் பாதுகாப்பு பற்றிய ஒரு வார பயிற்சி

 கடலில் மீனவர்களின் பாதுகாப்பு பற்றிய ஒரு வார பயிற்சி

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையும் கன்னியாகுமரி மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகமும் இணைந்து சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், சங்கல்ப் திட்ட நிதியுதவியுடன் நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடிப்படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சி நேற்று (14.3.2023 ) தொடங்கியது.

21.3.2023 வரை நடைபெறும் இந்த பயிற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டார்கள். உதவிப் பேராசிரியர் ச. மாரியப்பன், வரவேற்றார்,.

. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய கடல்சார் பயிற்சி நிலையத்தின் முதல்வர் கேப்டன் கே எஸ். பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

அவர் தனது  சிறப்புரையில் மீனவர்கள் வணிக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களை தங்களின் ஆழ்கடல் படகுகளில் பயன்படுத்தவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். ஏனெனில் தற்போதைய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வணிகக்கப்பல்கள் பயணிக்கும் தொலைதூர கடலில்களில் மீன்பிடித்து வருகின்றனர் என்பதனை அறிவுறுத்திப் பேசினார். உயிர்பாதுகாப்பு உபகரணங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடலில் இருக்கும்போது படகு என்ஜினில் பழுது ஏற்பட்டால் மீனவர்களே பழுது நீக்குவதற்கு இப்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்,.

மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீ. நீதிச்செல்வன் பயிற்சி விளக்கவுரையாற்றினார். விர்ஜில் கிராஸ், உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கன்னியாகுமரி மாவட்டம் தமது வாழ்த்துரையில் மீனவர்களுக்கான எஞ்சின் பராமரிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். 

பேராசிரியர் மற்றும் தலைவர் ந. வ. சுஜாத்குமார், மீன்பிடிப் படகு ஓட்டுநர் உரிமத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். கன்னியாகுமரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநர் எஸ். பி. லட்சுமிகாந்தன், மீனவர்கள் நவீனத் தொழில்நுட்பம் பற்றி அறிந்திருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் செ. விஸவநாதன் இதுபோன்ற பயிற்சிகளை மீனவர்களின் தேவைக்கேற்ப ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அமைந்துள்ள மீன்வள கடல்சார் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குநரகம் தொடர்ந்து நடத்தும் எனத் தெரிவித்தார்.

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப. அகிலன் தலைமையுரை ஆற்றினார். அவர் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கான பயிற்சிகளின் தேவையை வலியுறுத்தினார். மேலும், இது போன்ற மீனவர்களுக்குப் பயன்படும் பயிற்சிகளை கல்லூரி தொடர்ந்து நடத்தும் என்று  உறுதியளித்தார்.

மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் த. இரவிக்குமார் நன்றி கூறினார். முதுநிலை ஆராய்ச்சியாளர் சே. அர்ச்சனா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இந்த ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியின் போது கடல்சார் மின்னணுச் சாதனங்களைக் கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, கடல் வானிலை, மாலுமிக்கலை வரைபடங்கள், ஆயிரங்கால் தூண்டில் வடிவமைப்பு, மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடற்பயண விதிகள், தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், மீன்பிடிப் படகுகளில் மீன்களைக் கையாளுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படவிருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *