பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான மாணவர் திறமை போட்டிகள்
கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.இ.பள்ளியில் பலிக்கொடங்களுக்கு இடையேயான மாணவர் திறமை போட்டிகள் நடைபெற்றன.
3 நாட்கள் இந்த போட்டிகள் நடந்தன.. திருக்குறள் ஒப்புவித்தல், ஓரிகாமி, சதுரங்கம், நடனம், பாட்டுபோட்டி, வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல, சிலம்பம், கராத்தே, இசை கருவிகள் இசைத்தல் உள்பட 45க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்தன.
இதில் முக்கியமாக வளரி கலை, மாதிரி இயந்திர மனிதனை உருவாக்குதல், புகைப்படகலை போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டன,
இவற்றில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், போட்டியின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம், வெற்றி கேடயம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்பு சான்றிதள்களும் வழங்க்கப்பட்டன,
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆசியா பார்ம்ஸ் பாபு, ரோட்டேரியன் ரவி மாணிக்கம், கவுன்சிலர் சீனிவாசன், வளரி பயற்சி அமைப்பாளர் கார்த்திக், விநாயகா ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழரசன், இலக்கிய உலா ரவீந்திரன், அபிராமி முருகன், டாக்டர் அபிநயா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித ஓம் குளோபல் பள்ளி நிறுவனர் லட்சுமணபெருமாள், செயலாளர் உஷாராணி, இயக்குனர் சிவராம், முதல்வர் பொன் தங்க மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்,.