கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலி
கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திருச்செந்தூருக்கு காரில் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு இரும்பினார்கள்.’ இவர்கள் வந்த கார் முள்ளக்காடு பழையகாயல் இடையே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்து, காரை ஓட்டி வந்த பால்முத்து பிரபு (39), மற்றும் கந்தையா மனைவி தமிழ்செல்வி (69) ஆகிய 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பாண்டிசுதா சற்குன லில்லி (37) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தோணி முத்துராஜ் மனைவி பாண்டியம்மாள் தேவி (62), என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதானால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து இருக்கிறது,.