தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி […]
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு ‘கங்குவா’ கதை குறித்து பேசினார். அதில் அவர் பேசுகையில் கூறியதாவது:- அண்ணாத்த படப்பிடிப்பின்போது “நான் ஒரு வரலாற்றுப் […]
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் அவரது […]
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். ஆமணக்கின் வேரை இடித்து தேன் […]
கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், சாத்தூர் – தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் செ.லட்சுமணன், சிவகாசி – அகில இந்திய மேட்ச் சேம்பர் தலைவர் . ஜெ.விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்தனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய குறைவான விலை கொண்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து தற்போது சீனாவிலிருந்து சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் சமீபத்தில் […]
கோவில்பட்டி கடலையூர் ரோடு பகுதியில் வசிப்பவர் உஷா. இவர் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மகாலட்சுமி. பள்ளி தலைமையாசிரியை மகாலட்சுமி, ஜாதி ரீதியாக செயல்படுவது மட்டுமின்றி, தன்னை பணி செய்ய விடாமல் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், பள்ளியில் ஆசிரியர் வருகை பதிவேட்டினை மறைத்து வைத்துக் கொண்டு தன்னை கையெழுத்து […]
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை(டி.எச்.எஸ்.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி 2024-ம் நிதியாண்டில் இதுவரை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கண்டறிந்து, 495 விமானங்கள் மூலம் 145 நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கொலம்பியா, […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாளான இன்று (26-ந்தேதி) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக […]
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய […]