Month: July 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்

கோவில்பட்டி அருகே எப்போதும் வென்றான்  கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன், காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, என மூன்று பிரிவுகளாக வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.  இதில், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 20 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 32 மாட்டு  வண்டிகள், பூஞ்சிட்டு பிரிவில் 69 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். […]

சினிமா

சர்ச்சை கருத்து: சமந்தாவை சாடிய விஷ்ணு விஷால் மனைவி

மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சமந்தா சமீப காலமாக அவர் எடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவம் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், ‘வைரல் இன்பெக்சன் வந்தால், தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ் செய்யலாம்’ என்றார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் மருத்துவர்கள் உள்பட சிலர் எச்சரித்தனர். இதையடுத்து ,’என்னைபோல் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் என்பதற்காக எனக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்த விஷயங்களை தெரிவிக்கிறேன். இதை எனக்கு பரிந்துரைத்த மருத்துவர் 25 வருடங்களுக்கு மேல் பணி […]

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்- மாயாவதி

சென்னை பெரம்ப்பூரில் உள்ள வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யபப்ட்டார். இது தொடர்பாக ௮ பேர் கைதானார்கள். பின்னர் மேலும் 3 பேர் கைது செய்யபப்ட்டனர்.பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆம்ஸ்ட்ராங்க் உடல் ஒப்ப்டைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளதுஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள்முதல்-மந்திரியுமான மாயாவதி […]

செய்திகள்

மணப்பாடு கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையோரம் இயற்கையாக கல்லும் மணலும் அமைந்த சுமார் 60 அடி உயர மணல் குன்று உள்ளது, இந்த மணல் குன்றின் மேல் திருச்சிலுவைநாதர் ஆலயத்தின் பின்புறம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கலங்கரை விளக்கு பூங்கா, கடல் வழி ஊடுருவலை கண்காணிக்க உயர் கோபுர கேமரா உள்ளது. இதனை பொதுமக்கள் யாரும் பார்வையிட அனுமதி இல்லை. இந்த கடற்கரைக்கு செல்லும் மக்கள் உள்ளே சென்று பார்க்க முடியாமல் கடற்கரையில் வெளியில் இருந்து பார்த்து வருகிறார்கள். […]

கோவில்பட்டி

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்

சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் சேவை ஜூலை 21 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நாகா்கோவில் இடையே வாரம் 4 நாட்கள் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழை) இயங்கும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்: 06067), சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு அதேநாள் பிற்பகல் 1.50-க்கு […]

கோவில்பட்டி

கல்வி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்- 53 ஆசிரியர்கள் கைது

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு முடிவின்படி அரசாணை 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு முடியும்வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வலியுறுத்தியும் கோவில்பட்டியில் ஆசிரியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,’ கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகற்குள் சென்று  தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈடுபட்ட 21 […]