Month: July 2023

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அதிமுகவினர் திரண்டுவந்து வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து காரில் திருச்செந்தூர் சென்றார்,. அங்கு பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில் 32 டாஸ்மாக் கடைகள் 11-ந்தேதி மூடப்படும்- ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக் கோன் 313-வது பிறந்தநாள் விழா வருகிற 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு கோவில்பட்டி கோட்டத்தில் பாண்டவர் மங்கலம், மந்திதோப்பு ரோடு, சிவஞானபுரம், தளவாய்புரம், செட்டிக்குறிச்சி, அய்யனாரூத்து, கயத்தார், கோவில்பட்டி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர்பாண்டியாபுரம், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 32 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த […]

கோவில்பட்டி

திட்டங்குளம், முத்துநகர், பல்லக்குரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் ஜூனை தொடர்ந்து இந்த மாதமும்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கோவில்பட்டி கோட்ட  செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகர் உப கோட்டம் கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகாளான தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி ரோடு, சாய் சிட்டி, முத்துநகர் பகுதிகள் ,பல்லக்கு ரோடு, ரீஜெண்டு ஜவுளிக்கடை பகுதிகள், எட்டயபுரம் ரோடு இடதுபுறம், தொழிற்பேட்டை பகுதிகள் மற்றும் வடக்கு திட்டங்குளம் முழுவதும் உள்ள பகுதிகள் அனைத்தும் ஜூன் மாதம்  மின் கணக்கீடு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஒரு பிரமாண்டம்: பத்மலீலா கல்யாண மஹால் திறப்பு

கோவில்பட்டியில் ஒரு பிரமாண்டமாக பத்மலீலா கல்யாண மஹால் உருவாகி உள்ளது. இளையரசனேந்தல் சாலையில் கம்பீர தோற்றத்தில் காட்சி அளிக்கும் இந்த கல்யாண மகாலில் மேரேஜ் ஹால் மற்றும் டைனிங் ஹால் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டுள்ளது. 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மேரேஜ் ஹால், 250 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் டைனிங் ஹால், ஒரே நேரத்தில் 16 பேர் பயணிக்கும் வகையில் இரண்டு லிப்ட்கள், 21 நபர்கள் தங்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மேல் முறையீடு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மருத்துவ […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்த மாடுகள்

கோவில்பட்டி அருகேயுள்ள கிழவிபட்டியில் ஸ்ரீ மலை அலங்காரியம்மன், புது அம்மன், துர்க்கையம்மன், மலையடி கருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என்று இரண்டு வகையில் போட்டிகள் நடைபெற்றன. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில்  10 மாட்டு வண்டிகளும், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்த்தயத்தில்  11 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன. இந்தப் […]

கோவில்பட்டி

பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை மனுவை மத்திய அமைச்சருக்கு தபாலில் அனுப்பிவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 15 சதவீத பென்சன் பணத்தை வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சுப்பையா, துணை தலைவர் கந்தசாமி, கிளை துணை செயலாளர் பரமசிவன், அகில இந்திய துணை தலைவர் மோகன் தாஸ், […]

தூத்துக்குடி

10 ம் தேதி ஐ.டி.ஐ. மாணவர் நேரடி சேர்க்கை; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம்; அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 24.5.2023 முதல் 20.6.2023 வரை மாணவர்களிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது ஐ.டி.ஐ. சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை ஐ.டி.ஐ. சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் 10.7.2023 அன்று நடைபெறவிருக்கும் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என்று  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.  நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள விரும்புவோர் 8-ஆம் வகுப்பு ஃ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் […]

செய்திகள்

துபாய் மக்கள் தொகை 6 மாதங்களில் 50 ஆயிரத்துக்கு மேல் உயர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்றான  துபாய்க்கு இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருவது அதிகரித்துள்ளது. துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 கண்காட்சி உலக நாடுகளின் முதலீடுகளை கவருவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எக்ஸ்போ 2020 கண்காட்சி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 2020-ம் ஆண்டு துபாயின் […]

கோவில்பட்டி

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி,எல்கேஜி,யுகேஜி,வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்கள்,தமிழ் பாடல்கள்,விலங்குகள்,பறவைகள்,தமிழ் எழுத்துக்கள்,பூச்சி இனங்கள்,பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்ட பலவகையான விளக்கப் படங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசாபேகம்  தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கி பேசினார். ஜே.சி.ஐ. செயலாளர் […]