கோவில்பட்டி கரிசல் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா. நூற்றாண்டு விழா மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு கலை, இலக்கிய போட்டிகளை நடத்தியது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. கலை இலக்கிய பெருமன்ற தலைவர் அமல்புஷ்பம் தலைமை தாங்கினார். நகர செயலாளார் முத்துராமன், பொருளாளார் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர், எழுத்தாளர் பொன்னீலன், மருத்துவர் அறம், தமிழ் மாநில காங்கிரஸ் […]
மகாத்மா காந்தி நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது அதன்படி இன்று ந்தேதி அக்டோபர் 30 காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி உருவசிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் மாலை அணிவித்தார் அறக்கட்டளை பொறுப்புதலைவர் பி எஸ் திருப்பதி ராஜா உறுப்பினர்களைத் முத்துச்சாமி சுந்தரராஜ் மாவட்ட செயலாளர் சண்முக ராஜ் ராஜசேகரன் நகர தலைவர் அருண் பாண்டியன் துணைத்தலைவர் வேலுச்சாமி கோபால்சாமி காளியப்பன் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மலர் அணிவித்து மரியாதை […]
கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் கோவில்பட்டி கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் இந்திய செய்தித்தாள் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் எனும் வார இதழ் ஜனவரி 29ம் தேதி 1780ம் ஆண்டு ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கிஸ் என்பவரால் கொல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் வர்த்தக செய்திகள் இடம்பெற்றன. மேலும இந்த இதழில் போர்செய்திகள் இடம் பெற்றதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. நாடு முழுவதும் முதல் வார இதழ் வெளியான […]
கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளியாட்டுவிலா, ஆண்டுவிழா மாற்றும் தேசிய அளவில் கபடி போட்டிகள் நடத்தப்ப்ட்டன, தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவுக்கு பள்ளிக்கல்விக்குழு தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பே.கதிர்வேல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மத்திய மந்திரி ஜி,.கே.வாசன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ,கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் ஆகியோர் பரிசு […]
கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தாயார் சில நாட்களுக்கு முன்பு காலமானார். நேற்று அவருடைய இல்லத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கைகளை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்சினைகளில் கூட எந்த முடிவும் எடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக தி.மு.க. அரசு செயல்படுவது மிகுந்த […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரை அடுத்துள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமுத்து, பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டியது மட்டுமின்றி, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
“அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்-இரட்டை இலை சின்னம் எங்களுக்கே” முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார்
அ.தி.மு.க. அமைப்பு செயலாலளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னை வேப்பேரி போலீஸ் ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன, மனு செய்தவர்களிடம் நேர்காணல் செய்து வேட்பாளர் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார். மக்கள் மனதில் இடம் பெற்றவர் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்து தான் வேட்பாளர் தேர்வு செய்யவேண்டும். […]
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு; தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க
தூத்துக்குடி மாவட்டட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கூறி இருப்பதாவது:- “இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி 1, 2, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாம்பரம் விமானப்படை அலுவலகத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் […]
பிப்ரவரி 27ந் தேதி நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது என்று கட்சியின் பொதுசெயலாளர் டி.டிவி.தினகரன் அறிவித்து உள்ளார்.\ மேலும் அமமுக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் வேட்பாளராக ஏ.எம்.சிவபிரசாத் போட்டியிடுவார் என்றும் தெரிவித்து இருக்கிறார்,வேட்பாளருக்கு வயது 29 கடந்த 2021 பொது தேர்தலில் அமமுக சார்பில் முத்து குமரன் போட்டியிட்டு 1,204 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவணநாத சுவாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.இதையொட்டி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியாஹீத், பூர்ணாஹுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியில் இருந்து 1௦.20 மணிக்குள் சாலை கோபுரம், அனைத்து விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து மூலஸ்தான அம்பாள், சுவாமிக்கு வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இரவு […]