• May 19, 2024

“அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்-இரட்டை இலை சின்னம் எங்களுக்கே” முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் பேட்டி

 “அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்-இரட்டை இலை சின்னம் எங்களுக்கே” முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. அமைப்பு செயலாலளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னை வேப்பேரி போலீஸ் ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன, மனு செய்தவர்களிடம் நேர்காணல் செய்து வேட்பாளர் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார்.

மக்கள் மனதில் இடம் பெற்றவர் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்து தான் வேட்பாளர் தேர்வு செய்யவேண்டும். சரியான நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.நட்புணர்வு, தோழமை உணர்வு, கூட்டணி தர்மம் அடிப்படையில் கூட்டணி கட்சி தலைவரகளை சந்தித்து இருக்கிறோம்.அவர்கள் தங்கள் முடிவை அறிவிப்பார்கள்.

இந்த தேர்தலை பொறுத்தவரை ஜனநாயகத்துக்கும் பணநாயக்கத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் ஜனநாயகமே வெல்லும்/.வாக்காளர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.எனினும் தோல்வி ஏற்பட்டால் ஆட்சிக்கு கேட்ட பெயர் ஏற்படும் என்பதால் பல நூறு கோடி ரூபாய் செலவழித்து போலியான வெற்றியை பெற திட்டம் தீட்டி வருகிறார்கள். என்ன முயற்சி செய்தாலும் வெற்றி கிட்டாது.

தேர்தல் வாக்குதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை. என்ற குற்றசாட்டு மக்கள் மத்தியில் இருக்கிறது. அரசு ஊழியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.

அதிமுக வின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ள்ளது. எனவே இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரவு கடிதம் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கே. இதை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகிறோம்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *