கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் தேசிய புத்தக கண்காட்சியில் திருக்குறள் புத்தகத்தோடு புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குறள் நெறி வழி நடக்கவும்,வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் புத்தகம் புத்தாண்டு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமைதாங்கினார்..கோவில்பட்டி உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், ரோட்டரி […]







