Month: December 2022

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு; அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார்

தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது, அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.  தமிழகத்தில் 10 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளி  குழந்தைகளிடையே உள்ள  இயல்பான அறிவியல் ஆய்வு மனப்பான்மை வெளிக்கொணரும் விதமாக. ஒரு மைய கருப்பொருளை கொண்டு குழந்தைகள் மூன்று மாதங்களாக ஆய்வுகள் செய்து அதில் மாவட்ட அளவிலான மாநாடுகள், மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்று அதில் தேர்வான ஆய்வுகளில் 528 […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில்  மந்திதோப்பு செல்லும் சாலையை  விரிவுபடுத்த வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து மந்திதோப்பு செல்லும் சாலையை  விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர துணை செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரோஜா,துணை செயலாளர் அலாவுதீன், தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேது […]

கோவில்பட்டி

பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறைப்படுத்தகோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெறவேண்டும், தன பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்த செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சாரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, ஒவ்வொரு கல்வி மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, சாத்தான்குளம் ஆகிய கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடந்தது,  கோவில்பட்டி பழைய பஸ்நிலையம் முன்பு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இறந்தவர்கள் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 5 லட்சம் நிதி;

 துாத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் போது மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியது. இதன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் […]

செய்திகள்

மாண்ட்ஸ் புயல்: முன் எச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததால் மீனவர்கள் கடும் பாதிப்பு

சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் மழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- மாண்டஸ் புயல் கடந்த 5 ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதன் பிறகு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த விடியா அரசு என்ன செய்திருக்கவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டுமா? இல்லையா? முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி என்ன […]

செய்திகள்

சென்னையில் புயல் கரையை கடந்தபோது 3௦௦ மரங்கள் சாய்ந்தன

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் வீசியது. சென்னையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தாக்கி சென்னை  பட்டினம்பாக்கம் அருகே 2 பேர் உள்பட 4 பேர் பலியாகினர். சென்னை, செங்கல்பட்டில் மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் […]

செய்திகள்

மாண்ட்ஸ் புயல்: மாமல்லபுரத்தில் 8 அடி உயரம் எழுந்த ராட்சத அலை  

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது, புயலாக வலுப்பெற்றது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆட்டோ டிரைவர் கொலையில்  மர்மம் நீடிக்கிறது

கோவில்பட்டியை அடுத்துள்ள கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கணேசன் (வயது 41) .இவர் தண்ணீர் டிராக்டர் டிரைவராகவும், ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். கோவில்பட்டி வீர வாஞ்சி நகரில், குடும்பத்துடன்  குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ஆலம்பட்டி கண்மாயில் பிணமாக வீசப்பட்டுள்ளார். இது பற்றி நேற்று கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு […]

செய்திகள்

மாண்டஸ் புயல்: சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். […]

செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தான் அங்கீகாரம் கிடைக்கும்; அண்ணாமலை பேச்சுக்கு டி,ஜெயக்குமார்

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று பா.ஜனதா போட்டியிட்டது. பாரளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றியது.தற்போது 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது தனித்து போட்டியிடுவோம் என்று […]