40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
![40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; அமைச்சர் கீதாஜீவன் பேச்சு](https://tn96news.com/wp-content/uploads/2025/02/cancercamptutu-1.jpg)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மார்பக புற்று நோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வஉசி கல்லூரி அருகில் உள்ள பிங்க் பார்க்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து பேசியதாவது:_
பெண்களின் நலனுக்காக நடத்தப்படும் இந்த முகாமை பெண்கள் தங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள. புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உடனடியாக குணமாக்க முடியும். இன்று மட்டும் பரிசோதனை செய்துவிட்டு தொடர் பரிசோதனை செய்யாமல் விட்டால் நோயை குணப்படுத்த முடியாது.
சில பெண்கள் 55 வயது வரை தான் உயிருடன் இருக்கிறார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுதோறும் மேமோகிராம் மூலம் முழுமையான மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தற்போது மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இதனால் எந்த நோயும் குணப்படுத்த முடியும். இது போன்ற முகாம் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்படும்.
இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்,
இந்த முகாமை தூத்துக்குடி ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள் தொண்டு அறக்கட்டளை, நெல்லை கேன்சர் சென்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் நெல்லை கேன்சர் சென்டர் டாக்டர் அபிராமி, தூத்துக்குடி ரோட்டரி கிளப் தலைவர் பிண்டோ வில்லவராயர், செயலாளர் மகாலிங்கம் முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ் மாநகராட்சி, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, கவுன்சிலர்கள் இசைக்கிராஜா, பொன்னப்பன், திமுக கலை இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப், சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)