கோவில்பட்டியில் பள்ளி மாணவிகளுக்கான மாநில கால்பந்து போட்டி

 கோவில்பட்டியில் பள்ளி மாணவிகளுக்கான மாநில கால்பந்து போட்டி

மாநில அளவில் பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.

போட்டியில் சென்னை, ஈரோடு, மதுரை, விருதுநகர்,  திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டன. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில்  ஈரோடு மாவட்ட அணி மூன்று கோல்களும் நெல்லை மாவட்ட அணி ஒரு கோலும் போட்டனர் இந்த வெற்றி மூலம்  ஈரோடு மாவட்ட அணி 3 வது இடத்தை பிடித்தது. நெல்லை மாவட்ட அணியும் 4 வது இடத்துக்கு சென்றது.

இறுதிப் போட்டியில் தென்காசி- சென்னை அணிகள் மோதின. இதில் தென்காசி  அணியினர் 2 கோல்கள்  போட்டனர். சென்னை அணியினர் ஒரு கோல் போட்டனர். இதன்மூலம் முதல் பரிசை தென்காசி மாவட்ட அணியும் இரண்டாவது பரிசை சென்னை அணியும் பெற்றனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர்  முனைவர் ரவீந்திரன் மற்றும்  கோவில்பட்டி பெண்கள் கால்பந்து  கழக தலைவர் ஷர்மிளா ஷாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி கால்பந்து கழக செயலாளர் தேன்ராஜா வரவேற்று பேசினார். முதல் பரிசு பெற்ற தென்காசி மாவட்ட அணிக்கு கல்லூரி சார்பில்  கேடயம் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற சென்னை அணிக்கும்  . ன்றாவது பரிசு பெற்ற ஈரோடு அணிக்கும்  எவரெஸ்ட் எம் ராமச்சந்திரன் நினைவு கேடயம் வழங்கப்பட்டது. நான்காவது பரிசு பெற்ற நெல்லை மாவட்ட அணிக்கு கல்லூரி கேடயம் வழங்கப்பட்டது.

அனைத்து கேடயங்களையும் கோவில்பட்டி கால்பந்து கழகத் துணைத் தலைவர் சாம் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ரவீந்திரன் ஆகியோர்  வழங்கினார்கள். முடிவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் உமாசங்கர் நன்றி கூறினார். போட்டியின்  நடுவர்களாக முருகேசன்,அசோக்,பாண்டி,விக்கி மற்றும் கங்கா ஆகியோர்   பணியாற்றினார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *