பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம்: கோவில்பட்டியில் விழிப்புணர்வு

 பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம்: கோவில்பட்டியில் விழிப்புணர்வு

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம்,  தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பாக பெண்கள் மீதான வன்முறை விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் இன்று நேற்று காலை நடைபெற்றது.

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில செயலாளர்  தமிழரசன் தலைமை தாங்கினார்..  ஜெய்கிறிஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மேரி ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அபிராமி முருகன்,  பெண்ணுரிமை பாதுகாப்போம் என்ற  உறுதி மொழியை முன்மொழிந்தார்.

நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சுபேதார் கருப்பசாமி,  நாம்  தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மருதம் மாரியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சக்திவேல் முருகன்,  தமிழக வெற்றிக்  கழகம் செல்வின் சுந்தர், அன்னலட்சுமி, கலை இலக்கிய பெருமன்றம் ஜெயா ஜனார்த்தனன், வீர தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி ஜெயபால் ‌

ஒய் எம் சி ஏ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், ஷீலா ஜஸ்மின், திராவிடர் கழகம் தமிழரசி, ஐஎன்டியுசி ராஜசேகரன், துரைராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக் குமார், ஜெகன், வேம்பு மக்கள் சக்தி இயக்கம் தேவராஜன், சுபத்ரா, பாண்டியனார்  மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனி ராஜ்,  பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன்,

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் ஜாகிர் உசேன், வழக்கறிஞர் முத்துக்குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் லட்சுமணன், நடராஜபுரம் தெரு, பொதுமக்கள் நல்வாழ்வு இயக்கம் தலைவர் செண்பகம், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோக பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *